அருள்மிகு ஸ்ரீ உக்ரகதலி லக்ஷ்மி நரசிம்ம பெருமாள்
தம்மம்பட்டி கெங்கவல்லி வட்டம் சேலம் மாவட்டம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தம்மம்பட்டி மலைச்சார்ந்த பகுதியாகும். இப்பகுதி மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாகவும் இவ்வூர் விழங்கியது. மலை சாதி மக்கள் தங்கள் விலைபொருட்களாகிய காய், கனி, வாசனாதி திரவியங்களை இங்கு விற்று செல்வது வழக்கம்.
அவர்களுள் கொல்லி மலையை சார்ந்த லட்சுமியும் ஒருவர். அவள் தான் கொண்டுவந்த காதலி (வாழை) பழம் தினமும் காணாமல் போகவே ஊர் பெரிய மனிதரிடம் முறையிட்டாள். அவரும் விசாரணை செய்து  விடை தெரியாமல் தவித்தார்.  அன்றிரவு அயர்ந்து உறங்கும் போது கனவில் ஸ்ரீமந் நாராயணர் தோன்றி காணாமல் போன காதலி (வாழை) பழத்திற்கு தானே காரணம் என்றும் மலை ஜாதியினர் இரவு தங்கும் இடத்தில் காதலி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறேன். இங்கு எனக்கு ஆலயம் எழுப்பி வழிபாட்டு வர எல்லோர்க்கும் நல்லருள் புரிவதை கூறி மறைந்தார். மறு நாள் ஊர் மக்கள் ஒன்று கூடி அவ்விடத்தை தோண்ட காதலி வடிவ சுயம்புவாக இறைவன் காட்சிகொடுத்தார். இன்றளவும் அச்சுயம்பு வடிவத்தை காணலாம்.
அதே இடத்தில் தற்போதைய மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மமூர்த்தியின் மங்களவடிவம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவருவதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. திருக்கோவில் கல்வெட்டு செய்தி : இத்திருக்கோவிலின் தருமத்தை தடுத்தால் கங்கை நதியில் மேயுறும் காரம் பசுவை கொன்றால் என்ன தோஷம் ஏற்படுமோ அதற்கு ஆளாகி விடுவார்கள் என்று கல்வெட்டு செய்திகள் மூலம் அறியலாம். இத் திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும்  கல்வெட்டில் கூறப்பட்டு உள்ளது.

இத் திருக்கோவிலின்முகப்பில் 41 அடி உயர ஆஞ்சநேயர் எழுந்தருள் புரிகின்றார். அருகில் ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வாராக ஸ்ரீ விநாயக பெருமானும், அதை தாண்டி கோபுர வாயிலை கடந்தவுடன் ஸ்ரீ பெருமாள் திருபாதம், கோடி கம்பம் வைகுண்ட பெருமாள் சுதை சிற்பம். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நோக்கியவாறு கருடாழ்வார் திருவருள் தரிசித்தவுடன் இயன் விஜயன் துவாரபாலகர்களை, சேவித்து உள்ளே சென்றவுடன் அங்கு பன்னிரு ஆழ்வார்கள் திவ்ய தரிசனம் கிடைக்கிறது. ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி, சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் உற்சவரை தரிசித்தவுடன் மூலஷ்தானத்தில் சுயமுபு காதலி மூர்த்தியை மூலவராக கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் சங்கு, சக்கர அபயகரத்துடன் திருமகளை தன தொடை மீது அமர்த்தி அணைத்த திருக்கோலத்துடன் தாமரை, பீடத்தின் மீது அமர்ந்து திருவருள் புரியும் அற்புதமான தரிசனம் இத் தரிசனத்தைக் காண கண்கோடி போதாது.